\
திருமண பதிவு 30 நாட்களுக்குள் கட்டாயம்

திருமண பதிவு 30 நாட்களுக்குள் கட்டாயம்

திருமண பதிவு 30 நாட்களுக்குள் கட்டாயம்
Published on

திருமணம் நடந்த 30 நாட்களுக்குள் திருமண பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்ட ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும். இச்சட்டத்தின்படி, பதிவுத் துறைத் தலைவர் தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும், சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு திருமணப்பதிவு சட்டத்தின்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது. இந்நிலையில் இந்த கால அவகாசத்தை 30 நாட்களாக குறைத்து சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் திருமண பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யாதவர்கள் மீது அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் திருமண சலுகைகள் பெற முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com