சாலையை சீரமைக்க கோரிய கடல் கன்னி!

சாலையை சீரமைக்க கோரிய கடல் கன்னி!

சாலையை சீரமைக்க கோரிய கடல் கன்னி!
Published on

பெங்களூரில் சாலைகளை சீரமைக்க கோரி கடல் கன்னி போல் வேடமிட்டு, சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கனமழை காரணமாக சாலைகளில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளது என்று கூறி சமூக ஆர்வலர்கள் சிலர் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போக்குவரத்து அதிகமுள்ள பெங்களூர் சாலையில், நீல நிறம் கலந்த சாயத்தை ஊற்றி, அதன் அருகில் உள்ளூர் நடிகை ஒருவர் கடல் கன்னி போல் வேடமிட்டு அமர்ந்து போரட்டம் நடத்தினார். மேலும் மோசமான சாலையினால் ஏற்படும் விபத்து குறித்த காட்சிப்படமும் வெளியிடப்பட்டது. சமூக ஆர்வலர்கள் நடத்திய இந்த நூதன போராட்டம் பொதுமக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com