Headlines
Headlines pt

Headlines | ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல் சென்னையில் நடைபெற்ற கால்பந்து போட்டி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல் சென்னையில் நடைபெற்ற கால்பந்து போட்டி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது ரமலான் பண்டிகை. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை. அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து.

  • ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவின் ஆலமரம் என பிரதமர் மோடி புகழாரம். இந்தியாவை வலிமையான நாடாக்க அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான திட்டத்தை இப்போதே தயாரிக்க வேண்டும் என்றும் நாக்பூரில் பேச்சு.

  • திமுகவை வீழ்த்த யார், எந்தத் திட்டம் போட்டாலும் அதனை வீழ்த்தும் வலிமை திமுகவிடம் இருக்கிறது என்று, ஈரோடு இடைதேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பேச்சு.

  • தொண்டராகவும் பணியாற்ற தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. ஒருவரே மீண்டும் மாநிலத்தலைவராக வர கட்சி விதிகளில் இடம் இருப்பதாக முன்னாள் தலைவர் தமிழிசை கருத்து.

  • எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ். அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் அறிவிப்பு.

  • சென்னையில் காவல் துறை எச்சரிக்கையை மீறி தொடரும் பைக் ரேஸ் போட்டிகள். தி நகரில் சாகசத்தில் ஈடுபட்டு ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்களை தேடி வரும் காவல் துறை.

  • கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் கேட்டை உடைத்து புகுந்த வேன். சுதாரித்து கொண்டு சிறார்கள் தப்பியோடியதால் உயிர் தப்பினர்.

  • குஜராத் மாநிலம் சூரத்தில் பார்வையாளர்களை கவர்ந்த பாரம்பரிய நடன நிகழ்ச்சி. ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

  • சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ரம்ஜான் பண்டிகை உற்சாகம். கத்தாரில் கால்பந்து மைதானத்தில் பிரமாண்ட தொழுகை நிகழ்ச்சி.

  • சென்னையில் நடந்த கால்பந்து போட்டியில் பிரேசில் லெஜன்ட்ஸ் அணி வெற்றி. ரொனால்டினோ, ரிவால்டோ, ஐ.எம். விஜயனுக்காக அரங்கத்தில் விசில் சத்தம் அனல் பறந்தது.

  • ஐபிஎல் கிரிக்கெட் சிஎஸ்கே அணி மீண்டும் தோல்வி. ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • புதிய தோற்றத்துக்கு மாறிய நடிகர் அஜித். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் வைரல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com