Headlines
Headlinespt

Headlines | தாய்லாந்தில் மீண்டும் நிலநடுக்கம் முதல் கால்பந்தில் இந்தியா - பிரேசில் பலப்பரீட்சை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தாய்லாந்தில் மீண்டும் நிலநடுக்கம் முதல் இந்தியா - பிரேசில் கால்பந்து பலப்பரீட்சை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1644 ஆக அதிகரிப்பு. நபியிடா நகரில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.

  • மியான்மருக்கு நிவாரண பொருட்களுடன் கூடிய 5 விமானங்கள் சென்றுள்ளன என இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்.

  • தாய்லாந்தின் பாங்காக் நகரில் பூகம்பத்துக்கு மத்தியில் பிறந்த பெண் குழந்தை. மகள் பிறந்தவுடன் பூமி குலுங்குவது நின்றுவிட்டதாக தாய் மகிழ்ச்சி.

  • தேர்தலில் தங்களை நிராகரித்த தமிழ்நாட்டு மக்களை பாஜக தண்டிக்கிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை விடுவிக்கவில்லை எனக் கூறி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

  • ராணி வேலுநாச்சியார் குறித்து, வீராங்கனா என்ற தலைப்பில் டிஜிட்டல் புத்தகத்தை வெளியிட்ட பாஜக. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்பு.

  • விஜய் வருமான வரியை முழுமையாக செலுத்தினாரா? கேள்வி எழுப்பும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு.

  • திருச்செந்தூர் முருகன் கோயிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை. கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

  • ஒடிசாவின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பம். நவீன் பட்நாயக்கின் வலது கரமாக திகழ்ந்த வி.கே.பாண்டியனின் மனைவி திடீர் முடிவு.

  • சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச்சண்டை. மாவோயிஸ்ட்கள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  • மாசடைந்த தண்ணீரில் கலந்திருக்கும் 4 வகை ரசாயனங்கள். தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் தகவல்.

  • துருக்கியில் இஸ்தான்புல் மேயர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு. போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

  • சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து தமிழக வீரர் சரத் கமல் ஓய்வு. கடைசி போட்டியில் தோல்வியுடன் வெளியேறினார்.

  • ஐபிஎல் கிரிக்கெட் தொடர். 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி.

  • சென்னையில் களமிறங்கும் ரொனால்டினோ, காகா அடங்கிய பிரேசில் ஜாம்பவான் அணி. இந்திய லெவன் அணியுடன் நேரு விளையாட்டு அரங்கில் இன்று பலப்பரீட்சை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com