இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

பிளஸ் டூ பொதுத் தேர்வு முதல் நடிகர்களுக்கு டி.கே. சிவகுமார் மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பிளஸ் டூ பொதுத் தேர்வு முதல் நடிகர்களுக்கு டி.கே. சிவகுமார் மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை வரைஉள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம். மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

  • மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக தனது பிறந்த தேதியை மாற்றிக் கொண்டவர் இசைஞானி. இளையராஜாவை சந்தித்தபோது நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்.

  • முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றதும் தர்மயுத்தம் செய்ய சென்றுவிட்டார் ஓ.பி.எஸ். பதவி இல்லை என்றால் எந்த எல்லைக்கோட்டுக்கு வேண்டுமானாலும் போவார் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

  • திமுகவுக்கு பதிலாக தற்போது அதிமுக ஆட்சியில் இருந்தால், நாம் அனைவரும் இந்தியில் பேசிக் கொண்டு இருந்திருப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.

  • இந்த பூமியை இன்று நாம் வாழ்வதை விட மேம்படுத்தி அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என செங்கோட்டையில் கனிம வள கொள்ளையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேச்சு.

  • தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து எந்த திட்டமும் இல்லை என நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய காளியம்மாள் புதிய தலைமுறைக்கு பேட்டி.

  • தமிழ்நாட்டில் அரசியல் லாபத்திற்காக தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம். புதிய கல்விக் கொள்கையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் விளக்கம்.

  • கன்னட நடிகர்களுக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை. 16ஆவது சர்வதேச பெங்களூரு திரைப்பட விழாவிற்கு குறைவான நட்சத்திரங்களே வந்திருந்ததால் கோபம்.

  • போர் நிறுத்தம் தொடர்பான யோசனைகளை ஹமாஸ் ஏற்காததால் காசாவுக்கு உணவுப்பொருட்களை நிறுத்திய இஸ்ரேல். பட்டினியை ஆயுதமாக்க பார்ப்பதாக எகிப்து கண்டனம்.

  • துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வருண் சக்கரவர்த்தியின் சுழலில் வீழ்ந்தது நியூஸிலாந்து. 44 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.

  • துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா. மற்றொரு அரையிறுதியில் தென்னாப்ரிக்கா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com