Headlines | உறையவைத்த பூகம்பம் முதல் பாஜகவை கடுமையாக விமர்சித்த தவெக விஜய் வரை!
மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில், 112 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம். பூமி குலுங்கியதில் சுக்குநூறாகி சரிந்த பிரமாண்ட கட்டடங்கள்.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர், தாய்லாந்தில் மீட்பு பணிகள் தீவிரம். 180க்கும் அதிகமானோர் உயிரிழப்பு. 300க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல்.
மியான்மரில் இயற்கையின் கோரத் தண்டவத்தில் சிக்கியப் பயணிகள். உயிருக்கு அஞ்சி நடுங்கிய திக்.. திக் நொடிகள்.
மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்தார் பிரதமர் மோடி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா விரைந்து செய்யும் என்றும் உறுதி.
அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, ஆலோசனை நடைபெற்று வருவதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா பதில். உரிய நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் பேட்டி.
தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை இந்த முறை சந்திக்கும் என பொதுக் குழுவில் விஜய் உரை. 2026இல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி என்றும் அதிரடி பேச்சு.
தமிழ்நாடு என்றால் ஏன் ஜி, உங்களுக்கு அலர்ஜி என்று, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த விஜய். பலருக்கு தண்ணி காட்டிய தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார் என்றும் எச்சரிக்கை.
கூட்டணி சேர்பவர்களை மோடி காலி செய்வது போல, கூட்டணிக் கட்சிகளை திமுகவும் காலி செய்கிறது என ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு. வைகோவைத் தொடர்ந்து திருமாவளவனை திமுக காலி செய்வதாகக் குறிப்பிட்டு விமர்சனம்.
தமிழகத்தில் மக்களாட்சி தான் நடைபெறுகிறது என தவெக தலைவர் விஜய்க்கு திமுக பதில். திமுக குறித்து அவதூறு பரப்ப நினைப்பவர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்றும் காட்டம்.
தமிழக வெற்றிக் கழகத்தை லாட்டரி விற்பனை கழகமாக மாற்ற முயற்சிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் வெறும் வாய்ச் சவடாலா, சினிமா டயலாக்கா, களப்பணியா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் பேட்டி.
பாஜகவுக்கு வாக்கு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம் . விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல். ஏ. சிந்தனைச் செல்வன் விமர்சனம்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த காவல் துறை. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அசோக் குமாரை பிடிக்க முயன்றபோது தாக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு என விளக்கம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்வு. 48.66 லட்சம் பணியாளர்கள், 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைவர்.
மஹாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு. நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 23 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மே 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என அறிவிப்பு.
ஐபிஎல் தொடரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சென்னையை வீழ்த்திய பெங்களூரு அணி. 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.