Headlines
Headlinesfacebook

Headlines|தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் முதல் சூறையாடப்பட்ட சவுக்கு சங்கர் வீடு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் முதல் சூறையாடப்பட்ட சவுக்கு சங்கர் வீடு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக எம்பிக்களுடன் பிரதமர் மோடியை சந்திக்க திட்டம் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

  • தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழாசிரியர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தது மத்திய அரசு.

  • யூ-டியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம். தாக்குதலின் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இருப்பதாக சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு.

  • மும்பை தாராவி பகுதியில் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் வெடித்து சிதறிய சிலிண்டர்கள். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத்துறை வீரர்கள்.

  • வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.

  • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிநிர்வாகிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை. வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை நீக்க கட்சிகள் வலியுறுத்தல்.

  • உலக காச நோயாளிகளில் 30 விழுக்காடு பேர் இந்தியாவில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை. காச நோய் ஒழிப்புக்கான இலக்கில் இருந்து நாம் வெகுதொலைவில் இருப்பதாகவும் பேச்சு.

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வனச்சரக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை. இதில், கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் பறிமுதல்.

  • மயிலாடுதுறையில் அரசுப் பேருந்தில் தவறவிடப்பட்ட 2 வயது பெண் குழந்தை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைப்பு. குழந்தையை அமர வைத்துவிட்டு மனைவியை தந்தை அழைத்து வருவதற்கு முன் புறப்பட்ட பேருந்து.

  • மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த விவகாரம். மன்னிப்பு கேட்க முடியாது என நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா திட்டவட்டம்.

  • அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகிறது விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம். 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாவதாக, வண்ணமயமான போஸ்டரை வெளியிட்டு அறிவித்தது படக்குழு.

  • கேரள மாநிலம் இடுக்கியில் சர்வதேச பாரா கிளைடிங் சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு. பார்வையாளர்களை கவர்ந்த வீரர்கள்.

  • தமிழகத்தில் காலியாக உள்ள ஏழாயிரத்து 535 ஆசிரியர் பணியிடங்கள். நடப்பாண்டு நடைபெறும் தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணை வெளியீடு.

  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 24ஆயிரம் ரூபாயாக உயர்வு. எம்.பிக்களின் தினசரி படியும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.

  • ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் 2ஆவது போட்டிக்கு, இன்று டிக்கெட் விற்பனை. விராட் கோலியின் RCB அணிக்கு எதிரான போட்டி என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு.

  • சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதம். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com