Headlines
Headlinesfacebook

Headlines|அனைத்துக் கட்சி கூட்டம் முதல் பாட்டில் குடிநீரால் ஆபத்து வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அனைத்துக் கட்சி கூட்டம் முதல் பாட்டில் குடிநீரால் ஆபத்து வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபாரம். சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு.

  • தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள். 0.12 நொடிக்குள் ஸ்டம்பிங். இணையங்கள், சமூக ஊடங்களில் வைரல்.

  • நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் விவகாரம். மாநிலங்களவையில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்ட எதிர்கட்சிகள் திட்டம்.

  • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம். தேர்தல் விதிகள் தொடர்பான சந்தேகங்கள், பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க திட்டம்.

  • திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை என அண்ணாமலை விமர்சனம். கூட்டுக் களவாணிகள் எல்லாம் சேர்ந்து, நம் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதாகவும் குற்றச்சாட்டு.

  • தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அமல்படுத்த வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்.

  • சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைவதற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் மேலும் தீவிரமாக போராட்டங்களை மேற்கொள்ளப்போவதாக ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை.

  • வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை. திடீர் மழையில் நனைந்தபடி வாகனங்களில் பயணித்த மக்கள்.

  • பாம்பன் கடலில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் கழுகு பார்வை காட்சிகள். ஏப்ரல் மாதம் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் எனத் தகவல்.

  • சென்னை ஆலந்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சென்டர் மீடியனில் மோதி உயிரிழப்பு நள்ளிரவில் அதிவேகமாக சென்றதால் விபத்து எனத் தகவல்.

  • பாஜகவின் அடுத்த தலைவர் யார்? என்பது உள்ளிட்டவை குறித்து ஆர்.எஸ். எஸ். வருடாந்திர கூட்டத்தில் ஆலோசனை. தொகுதி மறுவரையறை மற்றும் மொழி கொள்கையால் நாட்டை பிளக்க முயற்சி நடப்பதாக, தமிழக அரசு மீது மறைமுகமாக விமர்சனம்.

  • துருக்கி இஸ்தான்புல் மேயர் ஊழல் வழக்கில் திடீர் கைது. தேர்தலில் அதிபர் எர்டோகனுக்கு போட்டியாளராக இருந்த நிலையில் நடவடிக்கை.

  • கனடா பிரதமர் மார்க் கார்னே திடீரென தேர்தலுக்கு அழைப்பு. அமெரிக்காவின் பொருளாதார போருக்கு மத்தியில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடத்தப்படும் அறிவிப்பு.

  • ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி ரன் மழை. சாதனை வெற்றியையும் பதிவு செய்தது.

  • இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயம். நடிகர் அஜித்குமார் ரேஸிங் அணி 3 ஆவது இடத்தை பிடித்து அசத்தல்.

  • விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறி புதிய சர்ச்சையை உருவாக்கிய பாலிவுட் நடிகர் சல்மான் கான். ராஷ்மிகாவிற்கு மகள் பிறந்தாலும் அவருடனும் நடிப்பேன் என பேச்சு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com