Headlines|தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை முதல் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் வரை!
தமிழக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. மக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா என எதிர்பார்ப்பு.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை, தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் காண ஏற்பாடு. சென்னையில் 100 இடங்களில் காண வசதி.
பட்ஜெட்டை முன்னிட்டு எல்லார்க்கும் எல்லாம் என வீடியோவை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை முதன்மைப்படுத்தி பதிவு.
பட்ஜெட் ஆவணங்களில் ரூபாய் போன்ற தேசிய சின்னத்தை நீக்குவது இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்.
முதன் முறையாக தமிழகத்திற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த மாநில திட்டக் குழு. நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என ஆய்வறிக்கையில் கணிப்பு.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பிராந்திய ஏற்றத்தாழ்வு. முன்னகரும் மேற்கு மாவட்டங்கள். பின்தங்கும் கிழக்கு மாவட்டங்கள்.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம். மதுபான கொள்முதலில் தனியார் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிக்கை.
வரும் 17ஆம் தேதி சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். முறைகேடு புகார் எழுந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களைப் போன்று, மதுபான ஊழல் என வீண்பழி சுமத்தினாலும் தங்கள் அரசு சிக்காது. அபாண்டமாக பழி சுமத்தி நடவடிக்கை எடுத்தால் துணிச்சலோடு எதிர்கொள்வோம் என அமைச்சர் ரகுபதி பேட்டி.
8 கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்கக்கோரி சென்னை பல்கலைக்கழகம் கடிதம். ஒப்பந்த குளறுபடி, நிதி பிரச்சினையால் சான்றிதழ்கள் இன்னும் தயாராகவில்லை என பல்கலைக்கழகம், புதிய தலைமுறைக்கு விளக்கம்.
சிம்ஃபனி படைப்புக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இளையராஜா.. இளையராஜாவின் திரை இசை பயணம் தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்தடைந்தார் மகேந்திர சிங் தோனி. விரைவில் பயிற்சியை தொடங்க இருப்பதாக தகவல்.
வட மாநிலங்களில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாட்டம். வண்ணங்களின் திருவிழாவை வரவேற்று மக்கள் உற்சாகம்.
அமெரிக்கா முன்வைத்துள்ள பரிந்துரைகளை ஏற்று உக்ரைனுடன் போர் நிறுத்தம் செய்துகொள்ள தயாராக இருக்கிறோம். நிரந்தரமாக அமைதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவுறுத்தல்.