Headlines | சீனா மீதான வரியை உயர்த்திய டிரம்ப் முதல் இன்று வெளியாகும் அஜித்தின் குட் பேட் அக்லி வரை!
சீன இறக்குமதிகள் மீதான வரியை 125 சதவீதமாக உயர்த்தியது அமெரிக்கா. பதிலடி கொடுக்காத நாடுகளுக்கு வரி விதிப்பு நடவடிக்கையை 90 நாள்கள் நிறுத்திவைப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.
நீட் விலக்கு பெற தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
நீட் விவகாரத்தில் அரசின் வேலையை செய்யாமல் அரசியல் செய்ய ஆரம்பித்தார் ஆளுநர் என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு. மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு சிதைப்பதாகவும் வேதனை.
நீட் விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, பாஜக. முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடத்துவதாக குற்றச்சாட்டு.
நீட் விவகாரத்தில் திமுக அரசியல் மோசடி செய்வதாக தவெக தலைவர் விஜய் விமர்சனம். மக்கள் விழித்துக் கொண்டனர்; இனி அவர்களை வஞ்சித்து ஏமாற்ற முடியாது என்றும் காட்டம்.
2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா. பாஜக மாநில தலைவர் நியமனம், கூட்டணி, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு.
கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நிறைவு. 3 நாள்களாக நடைபெற்ற சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள்.
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தாலும், ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும் முக்கிய காரணம் என்று ஆர்.எம்.வீரப்பனின் நினைவு நாளையொட்டி 30 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்.
மறைந்த குமரி அனந்தன் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி. காவல் துறை அணிவகுப்புடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை.
புதுச்சேரியில் 2 சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை. இளைஞர் இருவரை கைது செய்து கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு.
மதபோதகர் ஜான் ஜெபராஜூக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்.
தமிழ்ப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க முடிவு. இன்று முதல் முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
சென்னையில் ராகிங் கொடுமையால் பள்ளி மாணவர் தற்கொலை. சக மாணவர்கள் உருவகேலி செய்ததால் விபரீத முடிவு.
ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது குஜராத். சாய் சுதர்ஷனின் அசத்தல் அரைசதத்தால் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
இன்று வெளியாகிறது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம். நேற்று இரவு முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்.