மராத்தா இனத்தவர் இட ஒதுக்கீடு கோரி நடத்திய பேரணியால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராத்தா இனத்தவர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மும்பையில் இன்று அவர்கள் நடத்தும் பேரணியால் அந்நகரமே ஸ்தம்பித்து. இந்த பேரணியால் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பேரணியில் மகாராஷ்திரா மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பை நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மராத்தாக்களின் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து, உணவு விநியோக சேவையில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான டப்பாவாலாக்களும் பணிக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.