சத்தீஸ்கரில் சிறைபிடித்த படைவீரரின் புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்டுகள்!

சத்தீஸ்கரில் சிறைபிடித்த படைவீரரின் புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்டுகள்!
சத்தீஸ்கரில் சிறைபிடித்த படைவீரரின் புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்டுகள்!

சத்தீஸ்கரில் தங்களால் சிறைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு படைவீரரின் புகைப்படத்தை வெளியிட்டதுடன், அவரை விடுவிடுக்க நிபந்தனைகளையும் மாவோயிஸ்டுகள் முன்வைத்திருக்கின்றனர்.

சத்தீஸ்கரில் நடந்த மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். அதேபோல் இன்னும் சிலரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜம்முவைச் சேர்ந்த கோப்ரா கான்ஸ்டபிள் ராகேஸ்வர் சிங் என்பவரை கடத்திச் சென்றுள்ள மாவோயிஸ்டுகள், ``கான்ஸ்டபிள் ராகேஸ்வர் சிங் மன்ஹாஸ் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார். அவர் எங்கள் சிறையில் இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அடுத்த அழைப்பின்போது மற்ற தகவலை தருகிறோம்" என திங்கள்கிழமை காலை 11.26 மணிக்கு மொபைல் போன் மூலம் சுக்மா மாவட்ட பத்திரிகையாளரிடம் கூறியிருக்கின்றனர்.

மொபைல் போனில் பேசியவர் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகளில் ஒருவர் என கூறப்படுகிறது. இதனையடுத்து, மன்ஹாஸின் மனைவி மீனு தனது கணவரை திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.. ``அபிநந்தனை பாகிஸ்தானிலிருந்து திரும்ப அழைத்து வந்த விதத்தை போல, எனது கணவரைப் பாதுகாப்பாக மீட்கும்படி மோடிஜியிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்றார்.

இதேபோல் மன்ஹாஸின் 5 வயது குழந்தை, அவரை விடுவிக்க கோரி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ``நக்சல் அங்கிள், என் தந்தையை விடுவியுங்கள்" என்று அழுதுகொண்டே குழந்தை பேசும் வீடியோ வெளியானது. விரிவாக வாசிக்க > "நக்சல் அங்கிள், என் அப்பாவை விட்டுடுங்க!" - சிஆர்பிஎஃப் வீரரின் 5 வயது மகள் உருக்கம்

இந்நிலையில், இன்று ``காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் எங்கள் எதிரிகள் அல்ல. மன்ஹாஸை விடுவிக்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால், மத்தியஸ்தம் செய்ய ஆள்களை மத்திய அரசு நியமிக்க வேண்டும்" என்று மாவோயிஸ்டுகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்பின் சில மணி நேரங்களில் தாங்கள் சிறைபிடித்து வைத்திருக்கும் மன்ஹாஸின் புகைப்படத்தை மாவோயிஸ்ட்கள் வெளியிட்டனர். அந்தப் புகைப்படத்தில் மன்ஹாஸ் ஒரு தற்காலிக முகாமுக்குள் ஒரு காட்டில் நீல நிற தார்ச்சாலையில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. மேலும், அவருக்கு எந்த காயமும் இல்லை என்றும் அதில் காட்டுகிறது.

இந்தப் படத்தை மாவோயிஸ்டுகள் வெளியிட்டு பிஜாப்பூரில் உள்ள சில உள்ளூர் செய்தியாளர்களுக்கு அனுப்பியிருக்கின்றனர். இதற்கிடையில், பழங்குடியினர் ஆர்வலர் சோனி சோரி மற்றும் சுஜீத் சர்மா உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்ட மன்ஹாஸ் குடும்பம் ஒரு கடினமான நேரத்தை கடந்து வருவதால், ஜவானை விரைவில் விடுவிக்குமாறு மாவோயிஸ்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com