தமிழக-கேரள எல்லையில் இரவு முழுவதும் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக அதிரடி படைக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து அவர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோழிக்கோடு- பெங்களூர் நெடுஞ்சாலையில் வனப்பகுதியை ஒட்டிய வைத் திரி பகுதியில் உள்ள உபாவன் என்ற ரிசார்ட்டுக்கு பெண் உள்பட 4 பேர் கொண்ட மாவோயிஸ்ட்கள் நேற்று இரவு சென்றனர். அங்கிருந்தவர் களை மிரட்டி, பணம் மற்றும் உணவு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் அதிரடி படையினருக்கு வந்ததை அடுத்து, அவர்கள் அங்கு விரைந்தனர். அதற்குள் மாவோயிஸ்ட்டுகள் தப்பியோடி விட்டனர். அவர்களை தேடி போலீஸ் படையினர் சென்றபோது, மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இரவு முழுவதும் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார். மற்றவர்கள் ஓடிவிட்டன ர்.
கொல்லப்பட்டவர் மலப்புரம் பண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த பிபி ஜலீல் என்றும் மாவோயிஸ்ட் தலைவர் என்றும் அதிரடிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடலை மீட்ட போலீஸ் படையினர் தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர். இந்த சண்டையில் 2 போலீசார் காயமடைந் துள்ளனர்.

