\
பாலிவுட் ஹீரோயின் ஆவது எப்போது? மனுஷி சில்லர் பதில்

பாலிவுட் ஹீரோயின் ஆவது எப்போது? மனுஷி சில்லர் பதில்

பாலிவுட் ஹீரோயின் ஆவது எப்போது? மனுஷி சில்லர் பதில்
Published on

சீனாவின் சான்யா நகரில் நடந்த 2017 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹரியானாவைச் சேர்ந்த மனுஷியிடம், ’எப்போது பாலிவுட்டில் நடிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த மனுஷி சில்லர், ’இப்போதைக்கு பாலிவுட் எண்ணமில்லை. இப்போது எதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஹீரோக்களில் எனக்கு ஆமிர்கானை பிடிக்கும். அவர் படம் என்றால் நடிக்க ஆசையாக இருக்கிறேன். ஏனென்றால் அவர் படங்கள் கருத்துள்ள கதைகளை கொண்டிருக்கும். அதோடு நடிப்புக்கு சவாலான வேடம் கிடைக்கும். ஹீரோயின்களில் எனக்கு பிரியங்கா சோப்ராவை பிடிக்கும்’ என்றார்.

பிரியாங்கா சோப்ராவுக்குப் பின் 17 ஆண்டுகள் கழித்து உலக அழகி பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் மனுஷி என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com