\
இந்தியா திரும்பினார் உலக அழகி மனுஷி: உற்சாக வரவேற்பு

இந்தியா திரும்பினார் உலக அழகி மனுஷி: உற்சாக வரவேற்பு

இந்தியா திரும்பினார் உலக அழகி மனுஷி: உற்சாக வரவேற்பு
Published on: 

உலக அழகி பட்டம் வென்ற இந்திய மருத்துவ மாணவி மனுஷி சில்லர் நேற்றிரவு மும்பை திரும்பினார். 

சீனாவின் சான்யா நகரில் கடந்த வாரம் நடந்த 2017 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டார். ஹரியானாவைச் சேர்ந்த மனுஷிக்கு, பியூர்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி ஸ்டெஃபானி டெல் மகுடம் சூட்டினார். 
பிரியாங்கா சோப்ராவுக்குப் பின் 17 ஆண்டுகள் கழித்து உலக அழகி பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் மனுஷி சில்லர் பெற்றார். இந்நிலையில் சீனாவில் இருந்து விமானம் மூலம் நேற்று அவர் மும்பை திரும்பினார். விமான நிலையத்தில் திரண்டிருந்த நண்பர்களும், ஆதரவாளர்களும் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com