\
முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் மனோஜ் முகுந்த் நரவானே

முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் மனோஜ் முகுந்த் நரவானே

முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் மனோஜ் முகுந்த் நரவானே
Published on

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின்ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். நாடே அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்தது. இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் காலமான நிலையில் இடைக்கால ஏற்பாடாக முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

முப்படைத்தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக நரவானே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com