\
கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பு

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பு

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பு
Published on

கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்றுக் கொண்டார்.

தலைநகர் பானாஜியில் நடைபெற்ற விழாவில் மனோகர் பாரிக்கருக்கு ஆளுநர் மிருதுளா, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். மனோகர் பாரிக்கர் பதவியேற்புக்கு தடைவிதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில், பதவியேற்புக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், சட்டப்பேரவையில் வரும் 16ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்கவும் மனோகர் பாரிக்கருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com