உதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்காதீர்கள் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்

உதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்காதீர்கள் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்

உதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்காதீர்கள் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்
Published on

தனது உதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டாம் என்று மன்மோகன் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக வெற்று பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பிரதமராக மோடி கடந்த மே பதவியேற்றார். இதனையடுத்து முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டிருந்த உதவியாளர்களை அரசு குறைக்கத் திட்டமிட்டிருந்தது. அதாவது ஏற்கெனவே உள்ள 14 உதவியாளர்களை நான்காக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதத்தை எழுதியது. அதில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அரசு முடிவெடுத்தது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு 2 பிஏ, ஒரு கிளர்க், 2 பியூன் ஆகிய 5 உதவியாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர் என அக்கடிதம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மன்மோகன் சிங் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான் பிரதமராக இருந்தப் போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் உதவியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவில்லை. எனவே என்னுடைய உதவியாளர்கள் எண்ணிக்கையையும் 14ஆக இருக்கவேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு கடந்த 1990ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர்களுக்கு 14 உதவியாளர்கள் வரை அனுமதிக்கலாம் என்று முடிவெடுத்தது. மேலும் ஆட்சியிலிருந்து வெளியேறிய 5 ஆண்டுகளுக்கு பிறகு  இந்த எண்ணிக்கை 5ஆக குறைக்கப்படும் என்ற விதியும் உள்ளது. எனினும் முன்னாள் பிரதமர்களான ஐ.கே.குஜரால், ஹெச்.டி.தேவகவுடா உள்ளிட்டவர்களுக்கு அப்போதைய பிரதமர்கள் இந்த விதியிலிருந்து விலக்கு அளித்தனர். மேலும் வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டு வந்த உதவியாளர்கள் எண்ணிக்கை அவரின் விருப்பத்தால் தான் 12ஆக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com