மன்மோகன் சிங்கின் முன்னாள் ஆலோசகரிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன்  கும்பல்!!

மன்மோகன் சிங்கின் முன்னாள் ஆலோசகரிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் கும்பல்!!

மன்மோகன் சிங்கின் முன்னாள் ஆலோசகரிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் கும்பல்!!
Published on

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக பணியாற்றிய நபரிடம் ஆன்லைன் மோசடிக் கும்பல் கைவரிசையைக் காட்டியுள்ளது

கொரோனா காரணமாக வெளியில் சென்று தேவையான பொருட்களை வாங்க தயங்கும் பலரும், ஆன்லைனில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சில ஆன்லைன் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆலோசகராக பணியாற்றிய நபரிடம் ஆன்லைன் மோசடிக் கும்பல் கைவரிசையைக் காட்டியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஊடக ஆலோசகராக பணியாற்றியவர் சஞ்சயா பரு.

இவர் ஆன்லைனில் உள்ள ஒரு மது விற்கப்படும் இணையதளத்திற்குச் சென்று தொலைபேசி எண்ணை எடுத்துள்ளார். பின்னர் அவர்கள் கூறிய கணக்கிற்கு ரூ.24 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். அத்துடன் மதுவகைகளை ஆர்டர் செய்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டதும் அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சஞ்சயா பரு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையைத் தொடங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வங்கிக் கணக்கு , தொலைபேசி எண் என அனைத்தும் போலி. அதற்காக பயன்படுத்தப்பட்ட முகவரியும் பல மாநிலங்களைச் சேர்ந்த போலி முகவரியாக இருந்துள்ளது.

சஞ்சயா பரு, கணக்கில் இருந்து பணம் பரிமாறப்பட்டு 5 நிமிடத்துக்குள் அந்த பணம் பல வங்கிக் கணக்குகளுக்கும், செல்போன் பண பரிமாற்ற செயலிகளுக்கும் மாறியுள்ளது. போலீசார் எளிதில் நெருங்கமுடியாத அளவு நூதனமாக இந்த திருட்டு திட்டமிடப்பட்டு நடந்துள்ளது.
தீவிர விசாரணைக்கு பின் ஒரு வங்கிக்கணக்கின் தகவலின்படி சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com