CBIக்கு எதிராக தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்ட மணிஷ்: அதிரடி முடிவெடுத்த உச்ச நீதிமன்றம்!

CBIக்கு எதிராக தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்ட மணிஷ்: அதிரடி முடிவெடுத்த உச்ச நீதிமன்றம்!

CBIக்கு எதிராக தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்ட மணிஷ்: அதிரடி முடிவெடுத்த உச்ச நீதிமன்றம்!

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

டெல்லியில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், அது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, டெல்லி துணைநிலை ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வந்தது.

அதன்படி டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டும், விசாரிக்கப்பட்டும் வரும் நிலையில், ஏற்கெனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

நேற்றைய தினம் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு ஐந்து நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சிபிஐ அதிகாரிகளால் இன்று காலை முதல் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்தான் சிபிஐ-ன் கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மணிஷ் சிசோடியா தரப்பு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, இன்றைய தினமே மனு மீது விசாரணையை நடத்துவதாக அறிவித்திருக்கிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com