இந்தியா
"இதுவரை எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 114 பேர் உயிரிழந்துள்ளனர்” - குக்கி எம்எல்ஏ-க்கள் கூட்டாக அறிக்கை
மணிப்பூர் வன்முறையில் இதுவரை தங்கள் சமூகத்தைச் சேர்ந்த 114 பேர் உயிரிழந்திருப்பதாக குக்கி சமூக எம்எல்ஏ-க்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
குக்கி சமூகத்ததைச் சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் குக்கி இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், 12 பேர் நாகா இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், மீதமுள்ள 38 பேர் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

manipur riotpt desk
இந்நிலையில், மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையே உச்சகட்ட மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள குக்கி இன சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இதுவரை குக்கி இனத்தைச் சேர்ந்த 114 பேர் உயிரிழந்துள்ளதாக முதன் முறையாக எல்எல்ஏ-க்களே வெளியிட்டுள்ள தகவல் முக்கியமாக பார்க்கப்படுகிறது.