மணிப்பூரில் தொடரும் பிரச்னை.. மாறிமாறி வழியை அடைத்த மக்கள்!

மணிப்பூரில் குக்கி - மெய்தி இன மக்கள் மாறிமாறி வழியை அடைத்ததால் அத்தியாவசியப் பொருட்கள் சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூரில் சமவெளிப் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லவிடாமல் திமாபூர் - இம்பால் நெடுஞ்சாலையில் குக்கி இன மக்கள் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதேபோல தெற்குப் பகுதியில் மலைப்பகுதி மக்களுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் பாதையில் மெய்தி இன மக்கள் தடுப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குக்கி மக்கள் அதிகம் வாழும் சராசந்த்பூர் பகுதிக்கு செல்லும் வழியையும் மெய்தி இன மக்கள் அடைத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com