மணிப்பூர் கலவரத்தின் பின்னணி என்ன? 3 முக்கியக் காரணங்களை சொன்ன முதல்வர் பிரேன் சிங்!

மணிப்பூர் கலவரத்துக்கு 3 முக்கியக் காரணங்கள் இருப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரேன் சிங்
பிரேன் சிங்twitter

தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றிய மணிப்பூர் முதல்வர்!

நாட்டின் 77வது சுதந்திரன தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கும் அம்மாநிலத்தில் இன்று கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

ட்விட்டர்

மணிப்பூர் கலவரத்துக்கு 3 முக்கியக் காரணங்கள்!

அப்போது பேசிய அவர், “மணிப்பூரில் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், மாநிலம் முழுவதும் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவரவும் முயன்றுவருகிறோம்.

குறிப்பிட்ட சில தவறான புரிதல்கள், சுயநலச் செயல்கள், நாட்டை சீர்குலைப்பதற்கான வெளிநாட்டு சதி ஆகியவை மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்களை காவு வாங்கியுள்ளது.

பிரேன் சிங், மணிப்பூர் முதல்வர்

இவைகளால், ஏராளமானோர் நிவாரண முகாம்களில் வசிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

பிரேன் சிங்
'மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும்' - பிரதமர் மோடி நம்பிக்கை

மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க குழு

மக்கள் விரைவில் அவரவர் பகுதிகளில் மீண்டும் குடியேற்றப் படுவார்கள். சொந்த வீட்டிற்கு உடனடியாகச் செல்ல முடியாதவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு மாற்றப்படுவார்கள்.

தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
பிரேன் சிங், மணிப்பூர் முதல்வர்

அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு எதிராக அரசு எதையும் செய்யவில்லை. யாரும் அவ்வாறு செய்ய முடியாது. ’ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம்’ என்ற திட்டத்தை வழங்கவும், மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்PT

“காட்டை அழிப்பதை அரசு பார்த்துக் கொண்டிருக்காது!”

போதைப்பொருள் மீதான போர் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது நபர்களையோ இலக்காகக் கொண்டிருக்கவில்லை. ஆனால் தேசத்தையும், வருங்கால சந்ததியையும் போதைப்பொருளின் அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும்.

பிரேன் சிங்
“வாழ்வதற்கே அச்சுறுத்தல்! இதுவா பண்புள்ள சமூகம்?” சுதந்திர இந்தியாவில் பெருகும் மதவாதம், அடக்குமுறை!
மணிப்பூர் நிவாரண முகாம்கள்
மணிப்பூர் நிவாரண முகாம்கள்twitter

கசகசா சாகுபடிக்காக, பரவலாகக் காட்டை அழிப்பதையும், போதைப்பொருள் சாகுபடிகளையும் அரசு வெறுமனே பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மேலும் நாட்டின் இளைஞர்களை போதைப்பொருளிலிருந்து மணிப்பூர் பாதுகாத்து வருகிறது. 2017ஆம் ஆண்டு முதல், பாஜக அரசு மக்களின் நாடித்துடிப்பைப் புரிந்துகொண்டு மாநிலத்தின் நலனுக்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரேன் சிங்
’கசகசா பயிர்’ மீதான ஆதிக்கத்தை கைப்பற்ற போட்டியா? மணிப்பூர் கலவர பின்ணியில் போதைப்பொருள் கடத்தல்?

வெளிநாட்டுச் சதி குறித்து முன்பே பேசிய பிரேன் சிங்

மணிப்பூர் வன்முறை குறித்து கடந்த ஜூலை முதல் வாரத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பிரேன் சிங், “இந்தக் கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டினரின் சதி இருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேன் சிங்
மணிப்பூர் கலவரம்: இன்றும் துப்பாக்கிச் சூடு! பின்னணியில் வெளிநாட்டுச் சதியா? முதல்வர் சொல்வதென்ன?

மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும். அம்மக்களுக்காக ஒட்டுமொத்த தேசமே துணைநிற்கும்

இன்றைய சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி

“மணிப்பூரில் அமைதி திரும்பும்” - நம்பிக்கையளித்த மோடி

அதேபோல் இன்று, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய பிரதமர் மோடியும் மணிப்பூர் குறித்து உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையின்போது, “மணிப்பூரில் அமைதியை கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும். அம்மக்களுக்காக ஒட்டுமொத்த தேசமே துணைநிற்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்!

manipur
manipur pt desk

3 மாதங்களாகத் தொடரும் மணிப்பூர் வன்முறை

மணிப்பூரில் வன்முறை வெடித்து 3 மாதங்கள் ஆகியும் தற்போதுவரை அமைதியை மீட்டெடுக்க முடியாத நிலை உள்ளது. அவ்வப்போது துப்பாக்கிச் சூடு, எதிர்பாராத தாக்குதல் என அசாதாரண சூழல் நிலவுகிறது. மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோதல் ஏற்பட்ட பகுதிகளில் 144 தடை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேன் சிங்
வெடித்த வன்முறை... பற்றிய நெருப்பு... பரிதவித்த உயிர்கள்! மணிப்பூரில் நடப்பது என்ன?
பிரேன் சிங்
‘தளபதி 68-ல் தோனி...’? ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com