“மணிப்பூரில் அசாம் ரைபிள் படையை நிரந்தரமாக திரும்பப்பெறுக” - பிரதமருக்கு பாஜக நிர்வாகிகள் கடிதம்!

ஓரிரு தினங்களுக்கு முன் அசாம் ரைபிள் படையினரும், மணிப்பூர் காவல்துறையினரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் நடந்திருந்தது. இதில் அசாம் ரைபிள் படை வீரர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மணிப்பூரில் இருந்து அசாம் ரைபிள் படையினரை நிரந்தரமாக திரும்பப் பெற வேண்டும் என்று அந்த மாநில பாஜக நிர்வாகிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதேநேரம் அமைதிக்காக எந்த சார்பும் இன்றி சேவையாற்றுவதாக அசாம் ரைபிள் படை விளக்கம் அளித்துள்ளது.

மணிப்பூரில் காவல்துறைக்கும் அசாம் ரைபிள் படையினருக்கும் இடையே மோதல்கள் மூண்டுவருகின்றன. ஓரிரு தினங்களுக்கு முன் அசாம் ரைபிள் படையினரும், மணிப்பூர் காவல்துறையினரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் நடந்திருந்தது. இதில் அசாம் ரைபிள் படை வீரர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

NGMPC22 - 158

கடந்த சனிக்கிழமை நடந்த வாக்குவாதம் துப்பாக்கிச் சண்டையாக வெடித்ததில், போலீஸ் கமாண்டோ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மேலும் இரண்டு காவல்படையினருக்கும், அசாம் ரைபிள் வீரர்களுக்கும் காயம் அடைந்தனர்.

தொடர் மோதல் சம்பவங்களையடுத்து, மணிப்பூர் காவல்துறை சட்ட ஒழுங்கு ஐஜி சக்தி சென், “அசாம் ரைபிள்ஸ் நாங்கள் எங்கள் கடமையைச் செய்வதில் தலையிட்டது” என குற்றம்சாட்டியுள்ளார்.

கோதோல் சாலையில் தடுப்பு ஏற்படுத்த குக்கி போராளிகளுடன் கூட்டுச் சேர்ந்து அசாம் ரைபிள் வீரர்கள் சிலர் ஈடுபட்டதாக மணிப்பூர் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

NGMPC22 - 158

இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள் படை, “இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலில் வன்முறையை தடுக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்திய ராணுவமும் அசாம் ரைபிளும் மணிப்பூர் மக்களுக்கு கடந்த 90 நாட்களாக பணியாற்றி வருகிறோம். வன்முறையை தூண்டும் எந்த முயற்சியிலும் நாங்கள் ஈடுபடவில்லை” என்றுள்ளது. இந்நிலையில், அசாம் ரைபிள் படையினரை நிரந்தரமாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மணிப்பூர் பாஜக சார்பில் பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. “மணிப்பூரில் நிலவும் சிக்கலான சூழ்நிலை தன்மை காரணமாக படைவீரர்களுக்கு இடையே வேறுபாடு ஏற்பட்டு மோதல் நடப்பது துரதிர்ஷ்டவசமானது” என ராணுவம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com