“NEET கட்டாயமல்ல” முதல் “ரோஹித் வெமுலா சட்டம்” வரை- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.
மக்களவை தேர்தல் 2024 | காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
மக்களவை தேர்தல் 2024 | காங்கிரஸ் தேர்தல் அறிக்கைட்விட்டர்

தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் கட்சி தங்களின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிட்டுள்ளது.

முன்னதாக இத்தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழு நாடு முழுவதும் ஆலோசனை கேட்டது. மட்டுமன்றி இதற்காக தொடங்கப்பட்ட இணையதளம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கினர்.

அவை அனைத்தையும் பரிசீலித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை குறித்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் விளக்கினார். அவர் பேசுகையில், ”வேலைவாய்ப்பின்மை என்பது நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மறுக்கப்பட்ட அம்சங்களை நிறைவேற்றும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வேலை, மக்கள் நலன் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஒரு தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மக்களவை தேர்தல் 2024 | காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
“மோடி அரசின் சாதனை வேலை இல்லாமையும், விலைவாசி ஏற்றமும்” - தேர்தல் பரப்புரையில் ப.சிதம்பரம் பேச்சு

காங்கிஸ் தேர்தல் அறிக்கை - முக்கிய அம்சங்கள்

  • பாஜக ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை.

  • WORK, WEALTH, WELFARE என்ற அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்படும்.

  • குடும்பத்தில் பெண் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம் வழங்கப்படும்.

  • சமூக, பொருளதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

CUET, NEET தேர்வுகள் மாநிலங்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என மாற்றப்படும்.

  • பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு என்பது, அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

  • தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும்.

  • மாநில அரசுகள் தங்களது விருப்பப்படி மாணவர் சேர்க்கையை நடத்தலாம்.

  • தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும்

  • பிஎம் கேர்ஸ் நிதி முறைக்கேடு, பாதுகாப்பு ஒப்பந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்தப்படும்.

மருத்துவ படிப்புகளுக்கான நீர் தேர்வு கட்டாயமில்லை
  • பாஜக ஏற்படுத்திய சேதாரத்தை சிரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • கடந்த 10 ஆண்டுகளாக பாஜக பல சட்டங்களை இயற்றி விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. அப்படி பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.

ஊடக சுதந்திரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

  • பாஜக வலியுறுத்தும் ”ஒரே நாடு ஒரே தேர்தல்” முறை கொண்டுவரப்படாது

  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

  • மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

  • 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களவை தேர்தல் 2024 | காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
அமேதி To வயநாடு: பாஜகவைக் கண்டு பயமா? விமர்சிக்கும் கேரள சிபிஎம்; ராகுல் காந்தி தொகுதி மாறியது ஏன்?
  • அரசியல் சாசன 8 ஆவது அமைப்பில் ஏனைய மொழிகளையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • தேசிய கல்விக்கொள்கை, மாநில அரசுகளிடம் கலந்தாலோசனை நடத்திய பிறகே அமல்படுத்தப்படும்

இது போன்ற மேலும் சிறப்புடைய முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com