“கணக்கில்லாமல் மோடி, அமித்ஷா எடுக்கும் முடிவுகள் வித்தியாசமாக இருக்கின்றன” மாணிக்கம் தாகூர் எம்.பி!

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர் குறித்த நிகழ்ச்சி நிரலை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.

75 ஆண்டு கால வரலாறு கொண்ட நாடாளுமன்றத்தில், வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், கூட்டத்தொடர் குறித்த நிகழ்ச்சி நிரலை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்த உங்களது அனுபவங்களை பகிரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியவற்றை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com