இந்தியா
டிகிரி சான்றிதழ்களில் அப்பா பெயர் விவகாரம்: மேனகா காந்தி கடிதம்
டிகிரி சான்றிதழ்களில் அப்பா பெயர் விவகாரம்: மேனகா காந்தி கடிதம்
பட்டப் படிப்புச் சான்றிதழ்களில் தந்தையின் பெயர் குறிப்பிடுவதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
தனிமையில் வசிக்கும் தாயால் வளர்க்கப்படும் மாணவ, மாணவிகள் இருக்கக்கூடும் என்பதால், தந்தையின் பெயரை சான்றிதழில் குறிப்பிடச் சொல்வது கட்டாய விதியாக இருக்கக் கூடாது என்று மேனகா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பெண்கள் பலர் தன்னை சந்தித்து வலியுறுத்தியதாகவும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா கூறியுள்ளார்.