சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைவுபெற்றது மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைவுபெற்றது மண்டல பூஜை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைவுபெற்றது மண்டல பூஜை

சபரிமலையில் தங்க அங்கி சார்த்திய ஐயப்பனுக்கு சரண கோஷம் முழங்க மண்டல பூஜை நடைபெற்று நிறைவுற்றுள்ளது.

திருவிதாங்கூர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 453 சவரன் தங்க அங்கி சபரிமலைக்கு எடுத்து வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. தங்க அங்கி சார்த்தப்பட்ட ஐயப்பனை கண்ட பக்தர்கள் சரண கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். இதையடுத்து மண்டல பூஜை நிறைவுபெற்று கோயில் நடை சாத்தப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக வரும் வியாழக்கிழமை மீண்டும் ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படும்.

தொடர்ந்து டிசம்பர் 30 மற்றும் ஜனவரி 20 ஆகிய தேதிகளில் பந்தள அரண்மனை குடும்பத்தினர் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினங்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. தினசரி 60,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் மகரஜோதி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com