இந்திய பொறியாளர்களின் சாதனை: இன்று திறக்கப்படுகிறது உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை!

இந்திய பொறியாளர்களின் சாதனை: இன்று திறக்கப்படுகிறது உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை!
இந்திய பொறியாளர்களின் சாதனை:  இன்று திறக்கப்படுகிறது உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை!

இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் இருந்து, லடாக்கின் லே பகுதியை இணைக்கும் அடல் ரோடங் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். உலகின் மிகப்பெரிய பொறியியல் துறையின் சவாலாகக் கருதப்படும் இந்த சுரங்கப்பாதை பத்து ஆண்டு கடும் உழைப்பின் சின்னமாக உருவாகியுள்ளது.

மணாலியில் இருந்து லடாக்கின் லே-வுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கடியே 9.02 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது இந்த நெடிய சுரங்கப்பாதை. கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரத்து 44 அடி உயரத்தில் 13 மீட்டர் அகலத்தில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு 60 மீட்டர் தூரத்திற்கும் கண்காணிப்பு கேமரா, ஒவ்வொரு 500 மீட்டருக்கு இடையே அவசர கால வெளியேறும் வசதி, தொலைபேசி வசதி, காற்றோட்ட வசதி என பல வசதிகள் உள்ளன.

இந்த புதிய சாலையின் மூலம் மணாலிக்கும் லே பகுதிக்குமான 46 கிலோ மீட்டர் பயண தூரம் குறைகிறது. கடல்மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள இந்த இரட்டைவழி சுரங்கப்பாதை மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய உலகின் நீளமான சாலை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத்திட்டம். எல்லைச் சாலைகள் அமைப்பின் பத்து ஆண்டு உழைப்பும் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும் சாலையை உருவாக்கியுள்ளது.

இந்த சாலையில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லாம். ஒரு நாளில் 3 ஆயிரம் கார்களும் 1,500 சரக்கு வாகனங்களும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரியா நாட்டின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரோடங் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதைக்கு ஜூன் 28, 2010ம் ஆண்டு சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார்.

இமய மலையடிவாரத்தில் ஆண்டிற்கு 6 மாதம் நீடிக்கும் பனிக்காலங்‌களில் இந்த நெடுஞ்சாலையில் போகவே முடியாத நிலை இருந்துவந்தது. எனவே லடாக்கிற்கும் நாட்டின் மற்ற பகுதிகளுக்குமான போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்படும். ஆனால் தற்போது உருவாகியுள்ள சுரங்கப்பாதை மூலம் எல்லா காலங்களிலும் சென்றுவரமுடியும். சீன எல்லையில் உள்ள இந்தியப் படையினருக்கு அவசியமான பொருட்கள் எந்தப் பருவநிலையிலும் இ‌னி தாராளமாக கிடைக்கும் நிலை ஏற்படும்.

இந்தியப் படைகளை எதிரிப் படைகளின் கண்காணிப்பில் சிக்காமல் கொண்டு எல்லைப்பகுதிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கவும் செல்லவும் உதவும் எனவும் கூறப்படுகிறது. 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ரோடங் பாதையை அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டதால், அவர் நினைவாக அடல் ரோடங் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com