போலி கஸ்டமர் கேர்: 2 மணி நேரத்தில் ரூ.2.25 லட்சம் இழந்த தொழிலதிபர்!!

போலி கஸ்டமர் கேர்: 2 மணி நேரத்தில் ரூ.2.25 லட்சம் இழந்த தொழிலதிபர்!!

போலி கஸ்டமர் கேர்: 2 மணி நேரத்தில் ரூ.2.25 லட்சம் இழந்த தொழிலதிபர்!!
Published on

போலி கஸ்டமர் கேர் என தெரியாமல், போன் செய்து வங்கி தகவல்களை தெரிவித்ததால் தொழிலதிபதிபர் ஒருவர் 2.25 லட்ச ரூபாயை இழந்துள்ளார்

மும்பையைச் சேர்ந்த 40 வயதான தொழிலதிபர் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அனைத்து பொருட்களும் வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில் ரூ.400 மதிப்புள்ள நொறுக்குத்தீனி பாக்கெட்டுகள் மட்டும் வரவில்லை. இது குறித்து புகார் அளிப்பதற்காக இணையத்தில் கஸ்டமர் கேர் எண்ணை தேடி எடுத்த தொழிலதிபர், அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்முனையில் பேசிய நபர், தொழிலதிபரின் புகாரை தெளிவாக கேட்டுள்ளார். உங்களது பணத்தை உங்கள் கணக்கில் திருப்ப செலுத்துகிறோம் எனக் கூறி தொழிலதிபரின் வங்கி்க் கணக்கு, ஏடிஎம் அட்டையில் உள்ள எண்கள், சிவிவி, கைப்பேசி எண் ஆகியவற்றை வாங்கியுள்ளார். அதன் பின்னர் தொழிலதிபரின் அழைப்பை மற்றொரு எண்ணுக்கு மாற்றியுள்ளார்.

மற்றொரு எண்ணில் பேசிய நபர், UPI நம்பர் மற்றும் செல்போனுக்கு வரும் OTPயையும் கேட்டுள்ளார். சிறிதும் சந்தேகம் அடையாத தொழிலதிபர் கேட்டதை எல்லாம் கொடுத்துள்ளார். OTP தெரிவித்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் 4 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.2.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பணம் போனபின்னரே தெளிவான தொழிலதிபர் இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், OTP உட்பட அனைத்து தகவல்களையும் கொடுத்துவிட்டதால் எளிதாக மோசடி நடைபெற்றுள்ளது. வங்கித் தகவல்களை போனில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. குறிப்பாக UPI நம்பர் மற்றும் OTPயை கொடுக்கவே கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com