”கையிலே ஆகாசம்..” : முதல் முதலாக விமானத்தில் பயணித்த இளைஞர்.. பொழியும் வாழ்த்துகள்!

”கையிலே ஆகாசம்..” : முதல் முதலாக விமானத்தில் பயணித்த இளைஞர்.. பொழியும் வாழ்த்துகள்!
”கையிலே ஆகாசம்..” : முதல் முதலாக விமானத்தில் பயணித்த இளைஞர்.. பொழியும் வாழ்த்துகள்!

வானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசைக்கு எளிதான வழியாக விமானங்கள் இருந்தாலும் அந்த விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் இங்கு பலருக்கும் இருக்கிறது. என்றாவது ஒரு முறை விமானத்தில் சென்று வர மாட்டோமா என்ற ஏக்கம் அதில் பயணிக்காதவர்களிடையே இல்லாமல் இருக்கவே முடியாது.

இப்படி இருக்கையில் 27 வயதான இளைஞர் ஒருவர் முதல் முறையாக ஃப்ளைட்டில் செல்வதை மிகவும் நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், “எனக்கு 27 வயதாகிறது. விமானத்தில் செல்வது இதுவே முதல்முறை. என் வாழ்க்கையில் சிறிய அதிசயம் இதுவாகத்தான் இருக்கும். ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டு ஒடிசாவின் புவனேஷ்வரில் இருந்து சென்னைக்கு வரும் இண்டிகோ விமான டிக்கெட் ஃபோட்டோவையும் ஹேமந்த் என்ற அந்த இளைஞர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

ஹேமந்தின் இந்த பதிவு ட்விட்டர் வாசிகளிடையே வைரலாக பலரும் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகை குஷ்புவும் அந்த ட்வீட்டில் வாழ்த்தியுள்ளார். அதில், “இந்த பயணம் உங்களுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்.” என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “இதே போல இன்னும் பல முறை விமானத்தில் பறக்க வேண்டும்” என்றும், “அடுத்தமுறை விமானத்தில் பயணிப்பது குறித்து பதிவிடும் போது PNR எண்களை மறைத்து போடுங்கள்” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.


இதுபோக, “நான் 26 வயதாக இருக்கும் போது என்னுடைய சுய சம்பாத்தியத்தால் விமானத்தில் பயணித்தேன். இது கொண்டாடக் கூடிய ஒன்றே.” என்றும், “என்னுடைய குடும்பத்திலேயே நான்தான் முதல் முதலில் விமானத்தில் பயணித்தேன். அப்போது எனக்கு 25 வயது. இதனை என் குடும்பத்தார் ரொம்பவே பெருமையாக கருதினார்கள்.” என்றும் சிலர் தங்களுடைய முதல் விமான பயணத்தின் நினைவலைகளையும் பகிர்ந்திருந்தார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com