\
மோடி ஓவியம் வரைந்த இஸ்லாமிய பெண்ணுக்கு டார்ச்சர்!

மோடி ஓவியம் வரைந்த இஸ்லாமிய பெண்ணுக்கு டார்ச்சர்!

மோடி ஓவியம் வரைந்த இஸ்லாமிய பெண்ணுக்கு டார்ச்சர்!
Published on

உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ஓவியமாக வரைந்த இஸ்லாமிய பெண்ணை அவரது கணவர் உட்பட 6 பேர் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பாலியா மாவட்டம் சிக்கந்தர்பூரை சேர்ந்த நக்மா பிரவீன், பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சமீபத்தில் ஓவியமாக வரைந்திருக்கிறார். இதைக் கண்ட அவர் கணவர் பர்வேஸ் ஆத்திரமடைந்தார். ஏற்கனவே நக்மாவுடன் வரதட்சணை பிரச்னையால் சண்டையிட்டு வந்த பர்வேஸ், இதை காரணமாக்கி, 5 பேருடன் சேர்ந்து அவரை தாக்கினார். வீட்டை விட்டு துரத்தினார். இது தொடர்பாக நக்மாவின் தந்தை ஷாம்செர் கான் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com