டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்த இளைஞர்..!

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்த இளைஞர்..!

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்த இளைஞர்..!
Published on

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பாய்ந்த ஒருவர் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கினார்.

நாடு முழுவதும் 7 கட்ட மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு 4 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அப்படித்தான், இன்று வேட்பாளரை ஆதரித்து கெஜ்ரிவால் திறந்தவெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். மக்களை பார்த்து கையசத்தபடி தனது வாக்குகளை சேகரித்து வந்தார். அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்து திடீரென பாய்ந்த இளைஞர் ஒருவர், கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கினார். இதனால் கெஜ்ரிவால் நிலைகுனிந்து போனார். இதனையடுத்து பாதுகாப்பிற்காக நின்றிருந்தவர்கள், தாக்கிய நபரை வேகமாக பிடித்தனர். அவர் யார் என்ற விவரம் இன்னும் தெரியவரவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com