வந்தே பாரத்தின் சிறப்பு வசதி இதுதானா? - எண்ணெய்யை பிழியும் பயணி.. வைரலாகும் வீடியோ!

வந்தே பாரத்தின் சிறப்பு வசதி இதுதானா? - எண்ணெய்யை பிழியும் பயணி.. வைரலாகும் வீடியோ!
வந்தே பாரத்தின் சிறப்பு வசதி இதுதானா? - எண்ணெய்யை பிழியும் பயணி.. வைரலாகும் வீடியோ!

இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே சர்ச்சைக்கு குறைவில்லாமேயே செயல்பட்டு வருகிறது. அதிவேக விரைவு ரயிலாக இருக்கக் கூடிய இந்த வந்தே பாரத் ரயில் கால்நடைகள் குறுக்கிட்டு பழுதாவது தொடர்ந்து வந்தது.

அண்மை நிலவரப்படி நாட்டில் புதுடெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா (ஜம்மு காஷ்மீர்) , டெல்லி - வாரணாசி , மும்பை - காந்திநகர் , சென்னை - மைசூர் , புதுடெல்லி - அம்ப் ஆண்டௌரா (இமாச்சலப் பிரதேசம்) , ஹவுரா - நியூ ஜல்பைகுரி , பிலாஸ்பூர் - நாக்பூர் ஆகிய 7 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

எட்டாவதாக செகந்திராபாத் முதல் விசாகப்பட்டினம் வரையிலான வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான சேவையை கடந்த ஜனவரி 15ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்டும் உணவு தரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதன்படி, கடந்த பிப்ரவரி 3ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதராபாத்துக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட காலை உணவின் தரம் மிக மோசமாக இருந்ததாக பயணி ஒருவர் ட்விட்டரில் வீடியோவோடு பகிர்ந்திருக்கிறார்.

அதில், கொடுக்கப்பட்ட காலை உணவில் இருந்த வடையில் அந்த பயணி எண்ணெய்யை பிழிவது இடம்பெற்றிருக்கிறது. மேலும், “ரயிலில் பயணிகள் காலை உணவு சாப்பிடுவதற்கு அஞ்சுகிறார்கள். தரமற்ற உணவை விநியோகிக்கிறார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Sir, concerned official has been informed for corrective measures.</p>&mdash; IRCTC (@IRCTCofficial) <a href="https://twitter.com/IRCTCofficial/status/1621428078340866049?ref_src=twsrc%5Etfw">February 3, 2023</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அதே பதிவில் சில ரயில் பயணிகள் ரயில்களின் மோசமான நிலை குறித்த வீடியோக்களையும் பகிர்ந்து ரயில்வே துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து பதிவிட்டிருக்கிறார்கள். இந்த பதிவுகளெல்லாம் வைரலாகவே, இந்தியன் ரயில்வேயின் ரயில்சேவா ட்விட்டர் பக்கத்திலிருந்து பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதில் ரயில்வே துறையின் இணையதளத்தில் அல்லது 139 என்ற எண்ணை அழைத்து புகார்களை தெரிவிக்கலாம் என குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல, வந்தே பாரத் ரயில் தரமற்ற உணவு வழக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டதாகவும் IRCTC சார்பில் பதிவிடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com