\
காரில் சென்றவரை வழிமறித்து சுட்ட கும்பல் : பதபதைக்கும் காட்சி

காரில் சென்றவரை வழிமறித்து சுட்ட கும்பல் : பதபதைக்கும் காட்சி

காரில் சென்றவரை வழிமறித்து சுட்ட கும்பல் : பதபதைக்கும் காட்சி
Published on

நடுரோட்டில் ஒருவரை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

டெல்லியில் கேடா கூர்ட் கிராமத்தை சேர்ந்தவர் மணிஷ். இவர் தனது நண்பர்களுடன் வடடெல்லியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது காரை மற்றொரு கார் வேகமாக வந்து இடைமறித்தது. அடுத்த நிமிடமே அந்த காரில் இருந்த கும்பல் மணிஷ் காரை நோக்கியும், அவரை நோக்கியும் சரமாரியாக சுடத் தொடங்கியது.

இந்தத் தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க மணிஷ் காரிலிருந்து இறங்கி தப்பித்து ஓடினார். ஆனால் அதற்குள் அந்தக் கும்பல் அவரைச் சுட்டுவிட்டது. 4 குண்டுகள் உடலில் பாய்ந்த மணிஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை உடனே நண்பர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்டு அம்பேத்கர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மணிஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கே.என்.கட்ஜு மார்க் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சுடப்பட்ட இந்தக் காட்சி அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அது இப்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com