காதலிக்க மறுத்த மாற்றுத்திறனாளி பெண்ணின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைப்பு
சென்னையில், காதலிக்க மறுத்த மாற்றுத்திறனாளி பெண்ணின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மல்லிகா. சோழவரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரைக் காதலித்த மல்லிகா, அந்த நபரின் நடத்தை பிடிக்காமல் விலகியுள்ளார். எனினும் பிரபாகரன் மல்லிகாவை விடாமல் பின்தொடர்ந்துள்ளார். தன்னை காதலிக்காவிட்டால் மல்லிகாவையும், அவரது இருசக்கவாகனத்தையும் எரித்து விடுவதாக மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி இரவு வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மல்லிகாவின் வாகனம் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரில் செம்பியம் காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரபாகரன் தனது நண்பருடன் சேர்ந்து வாகனத்தை எரித்த காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.