மதுவாங்க பணம் தராத 75 வயது தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் - கேரளாவில் கொடூரம்!

மதுவாங்க பணம் தராத 75 வயது தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் - கேரளாவில் கொடூரம்!
மதுவாங்க பணம் தராத 75 வயது தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் - கேரளாவில் கொடூரம்!

மதுவாங்க பணம் தராத 75 வயது தாயை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இன்றைய இளைய தலைமுறையினர் தொடங்கி வயதானவர் வரை மதுப்பழக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக பதிவாகி வருகிறது. கேரளாவில் சிறுவன் ஒருவன் போதைபொருள் வாங்க பணம் கேட்டு தனது தாய் மற்றும் பாட்டியை தாக்கிய சம்பவம் இணையங்களில் பரவி வைரலான சில மாதங்களில் மது வாங்க பணம் தராத தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

திருச்சூர் மாவட்டத்தில் புன்னுயூர்குளம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. செம்மனூரைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி தலேகட்டில் விட்டில் ஸ்ரீமதி. இவருடைய மகன் 55 வயதான மனோஜ், செவ்வாய்க்கிழமை மது வாங்க பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

மூதாட்டி பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த மனோஜ், ஸ்ரீமதி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த ஸ்ரீமதியை கொச்சின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ஸ்ரீமதியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். முதலில் குன்னம்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீமதி தற்போது மேற்சிகிச்சைக்காக கொச்சின் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஏற்கெனவே மனோஜ் தனது தாயாரிடம் இதுபோல் பலமுறை நடந்துகொண்டதும், அவரை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com