“கைலாஷ் பதி நாத் கி ஜெய் ஹோ” - போதையில் காளை சவாரி செய்த இளைஞர் மீது பாய்ந்த வழக்கு! வீடியோ!

ரிஷிகேஷில் இளைஞர் ஒருவர் காளை மீது சவாரி செய்த வீடியோ வைரலான நிலையில், அவருக்கு எதிராகக் காவல் துறை வழக்கு பதிந்துள்ளது.
காளை சவாரி செய்யும் இளைஞர்
காளை சவாரி செய்யும் இளைஞர்Uttarakhand Police twitter page

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

இன்று சமூக ஊடகங்களில் பல விநோதமான வீடியோக்கள் வெளியாகி லைக்ஸ்களை அள்ளுவதுடன் வைரலும் ஆகின்றன. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் தாங்களும் ஏதாவது செய்து வைரல் ஆக வேண்டும் என்கிற நோக்கில் இன்றைய குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் எனப் பலரும் தங்கள் திறமைகளை வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில், ரிஷிகேஷைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காளை மீது அமர்ந்து சவாரி செய்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில், காளை மீது அமர்ந்திருக்கும் இளைஞர் “கைலாஷ் பதி நாத் கி ஜெய் ஹோ” என்று கூறியபடி விரட்டுகிறார். அந்த காளையும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷின் தெருக்களில் சீறிப் பாய்கிறது. இந்த வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலானது. அதேநேரத்தில், அந்த இளைஞர் காளையைக் கொடுமைப்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதனடிப்படையில் அந்த இளைஞர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து உத்தரகாண்ட் காவல் துறை, “கடந்த மே 5ஆம் தேதி இரவு, ரிஷிகேஷில் உள்ள தபோவனத்தில் குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர், காளை ஒன்றின்மீது அமர்ந்து சவாரி செய்துள்ளார். இதைப் பார்த்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதன்பேரில், அந்த இளைஞருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுபோல் விலங்குகளைக் கொடுமைப்படுத்தக்கூடாது என அந்த இளைஞரிடம் அறிவுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com