வீட்டுக்குள் அம்மாவின் எலும்புக் கூடு: 1 வருடம் கழித்து வந்த அமெரிக்க மகன் ஷாக்!

வீட்டுக்குள் அம்மாவின் எலும்புக் கூடு: 1 வருடம் கழித்து வந்த அமெரிக்க மகன் ஷாக்!

வீட்டுக்குள் அம்மாவின் எலும்புக் கூடு: 1 வருடம் கழித்து வந்த அமெரிக்க மகன் ஷாக்!
Published on

அமெரிக்காவில் இருந்து ஒரு வருடம் கழித்து அம்மாவைப் பார்க்க வந்த மகன், வீட்டுக்குள் அவரது எலும்புக் கூடை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
மும்பை அந்தேரியை சேர்ந்தவர் ஆஷா சஹானி (63). இவரது மகன் ரிதுராஜ். ஐடி ஊழியரான இவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. பின்னர் திருமணம் முடிந்து மனைவியுடன் அங்கு பல வருடமாக வசித்துவருகிறார்.  அங்கிருந்து அடிக்கடி அம்மாவிடம் போனில் பேசுவார் ரிது ராஜ். ஆறு மாதம் அல்லது வருடத்துக்கு ஒரு முறை மும்பை வந்து அம்மாவை சந்திப்பார். கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் அம்மாவிடம் பேசிய ரிதுராஜ், பிறகு வேலையில் பிசியாகிவிட்டார்.
இந்நிலையில் நேற்று மும்பைக்கு வந்த அவர், அந்தேரியில் பெல்ஸ்காட் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 10 வது மாடியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். காலிங் பெல்லை அழுத்தினார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தில் விசாரித்தார். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை அடுத்து போலீசில் புகார் செய்தார். 
போலீசார் கதை உடைத்து உள்ளே சென்று பார்த்தால், ஆஷாவின் எலும்புக் கூடு மட்டுமே அங்கு கிடந்தது. இதையடுத்து ரிதுராஜ் அதிர்ச்சி அடைந்தார். போலீசாரும் ஷாக் ஆயினர்.
கதவு உள்பக்கம் பூட்டியிருந்ததால் இது இயற்கையான மரணமாகத்தான் இருக்கும் என்று கூறும் போலீசார், மேலிருந்து துர்நாற்றம் ஏதும் எப்படி வராமல் இருந்திருக்கும் என்று பிளாட்டில் இருந்தவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com