இந்தியா
கரும்புள்ளி குத்தி, செருப்புமாலை அணிவித்து... முதியவருக்கு நேர்ந்த கொடுமை
கரும்புள்ளி குத்தி, செருப்புமாலை அணிவித்து... முதியவருக்கு நேர்ந்த கொடுமை
உத்தரகண்ட் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரின் உத்தரவை அடுத்து ஒருவருக்கு செருப்பு மாலை அணிவித்து மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரூர்கீ பகுதியில் தவறான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக ஒருவரின் முகத்தில் கருப்பு மை பூசி மொட்டை அடித்து செருப்பு மாலை அணிவித்து மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.