\
சாலையில் நடந்து சென்றவர் கோடாரியால் வெட்டிக் கொலை - பதறவைக்கும் வீடியோ

சாலையில் நடந்து சென்றவர் கோடாரியால் வெட்டிக் கொலை - பதறவைக்கும் வீடியோ

சாலையில் நடந்து சென்றவர் கோடாரியால் வெட்டிக் கொலை - பதறவைக்கும் வீடியோ
Published on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாலையில் நடந்து சென்றவரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்யும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்டாப்பூர் என்னுமிடத்தில் ரமேஷ் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேரில் ஒருவர், கோடாரியால் ரமேஷை வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்களை அந்த நபர் மிரட்டியுள்ளார். இதனால் அவர்களால் கொலையை தடுக்க முடியவில்லை. சரமாரியாக ரமேஷை வெட்டிய அந்த நபர் கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றுவிட்டார். 

கொலை நடந்த போது அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் எடுத்த வீடியோ வெளியாகி ‌அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட ரமேஷ் மீது சம்சாபாத் காவல்நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பும்போது ரமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக லட்சுமணன், கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com