இதுக்கெல்லாமா கொலை பண்ணுவாங்க: என்ன உலகமடா சாமி
எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டிருந்த காதலியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வகோலாவை சேர்ந்தவர் ஆயிஷா ஷேக். வயது 18. இவரை அவர் வீட்டுக்கு அருகிலுள்ள சம்பாஜி மோரே என்பவர் காதலித்ததாகக் கூறப்படுகிறது. மோரே எப்போது போன் பண்ணினாலும் பிசியாக இருந்திருக்கிறது ஆயிஷாவின் போன். பலமுறை இதுபற்றி கேட்டிருக்கிறார் மோரே. எனக்கு வீட்டிலிருந்து போன் வரும். அதனால் பிசியாகத்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஆயிஷா. இதில் திருப்தி ஏற்படவில்லை ஓவர் காதல் கொண்ட மோரேவுக்கு. அதோடு ஆயிஷா மீது சந்தேகமும் ஏற்பட்டது.
வழக்கம் போல நேற்றும் போன் செய்தார். பிசியாகவே இருந்தது ஆயிஷாவின் போன். கடுப்பான மோரே, அவரைத் தேடிப் போனார். அப்போது போன் பேசிக்கொண்டிருந்தார் ஆயிஷா. போனை காண்பிக்கச் சொன்னான் மோரே. போனில் அப்பா இருக்கிறார். பிறகு பேசுகிறேன் என்று சைகையால் சொன்னார் ஆயிஷா. ஆத்திரமடைந்த மோரே மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆயிஷாவின் கழுத்தை அறுத்தான். நிலைகுலைந்த ஆயிஷா, ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். வழியிலேயே அவர் மரணமடைந்தார். கத்தியுடன் நின்றிருந்த மோரேவை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.