தாமதமாக துண்டு கொண்டு வந்த மனைவிக்கு நேர்ந்த விபரீதம்! நடந்தது என்ன?

தாமதமாக துண்டு கொண்டு வந்த மனைவிக்கு நேர்ந்த விபரீதம்! நடந்தது என்ன?

தாமதமாக துண்டு கொண்டு வந்த மனைவிக்கு நேர்ந்த விபரீதம்! நடந்தது என்ன?
Published on

குளித்துவிட்டு துண்டை கேட்ட கணவருக்கு, 'கொஞ்சம் இருங்க' என மனைவி கூறியதால் ஆத்திரமடைந்தவர் அவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் பாலகாட் மாவட்டம் ஹிராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் பாஹி. 50வயதான இவர், வனத்துறையில் தினக்கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல குளித்து முடித்துவிட்டு தனது மனைவி புஷ்பா பாயிடம் (45), 'குளித்துவிட்டேன். துண்டு கொண்டுவா' என கேட்டுள்ளார். அதற்கு அவரது மனைவி புஷ்பா, 'பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரம் இருங்க' என பதிலளித்துள்ளார். இதனால் கடுப்பான ராஜ்குமார், மண்வெட்டி ஒன்றை எடுத்து, அவரது மனைவி தலையில் சரமாரியாக அடித்துள்ளார். ஆத்திரம் தீர அடித்து கொன்றுள்ளார். புஷ்பா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை கூறுகையில், 'அவர் தனது மனைவியை அடித்தபோது, அவரது 23வயதான மகள் தடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவரையும் மிரட்டியிருக்கிறார் ராஜ்குமார். அவர் மீது குடும்பத்தார் கொடுத்த புகாரின்பேரின் கொலை வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது'' என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com