தெலங்கானாஎக்ஸ் தளம்
இந்தியா
தெலங்கானா | மட்டன் சமைக்க மறுத்த மனைவி.. அடித்துக் கொன்ற கொடூரக் கணவர்!
தெலங்கானாவில் மட்டன் சமைக்க மறுத்த மனைவியை, கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் மட்டன் சமைக்க மறுத்த மனைவியை, கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாஎக்ஸ் தளம்
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத்தைச் சேர்ந்தவர் மாலோத் கலாவதி (35). இவருடைய கணவர் இன்று மட்டன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அதைச் சமைத்துத் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அவருடைய மனைவி அதைச் சமைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவரது கணவர், மனைவியை அடித்தே கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கலாவதியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.