தங்காத மாதங்களுக்கு வாடகையா?: ரூம்மேட்ஸ் இருவரை கொலை செய்த இளைஞர்..!

தங்காத மாதங்களுக்கு வாடகையா?: ரூம்மேட்ஸ் இருவரை கொலை செய்த இளைஞர்..!

தங்காத மாதங்களுக்கு வாடகையா?: ரூம்மேட்ஸ் இருவரை கொலை செய்த இளைஞர்..!
Published on
நான்கு மாதங்களாக வீட்டில் தங்காத நிலையில், அதற்கும் சேர்த்து வாடகை கேட்டு வற்புறுத்தியதால் ரூம்மேட்ஸ் இருவரை கொலை செய்துள்ளார் சக ரூம்மேட்.
 
மேற்கு டெல்லியின் ரகுபீர் நகரில் முகமது அஜாம், அமீர் ஹசன், சாகீர் என்ற மூவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அதன் வாடகை 4000 ரூபாய் என்று கூறப்படுகிறது.
 
கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, கடந்த 15 தினங்களுக்கு முன்புதான் சாகீர் டெல்லிக்கு வந்திருக்கிறார்.
 
இந்நிலையில், 4 மாத வாடகையை தர வேண்டும் என்று  முகமது அஜாம், அமீர் ஹசன் ஆகிய இருவரும் சாகீரிடம் கேட்டுள்ளனர். ஆனால், 4 மாத காலமும், தனது சொந்த ஊரில் இருந்ததால், வாடகை தர முடியாது என்று சாகீர் கூறியுள்ளார்.
 
இதனால் அவர்களுக்கிடையே, வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. 2 பேரும் சாகீரை அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சாகீர், அவர்கள் 2 பேரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
 
இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியிருந்த சாகீரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com