4வதும் பெண் குழந்தை: 3 பெண் பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை

4வதும் பெண் குழந்தை: 3 பெண் பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை

4வதும் பெண் குழந்தை: 3 பெண் பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை
Published on

நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு கூலித் தொழிலாளி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், ஜுனாகத் மாவட்டம் கம்பாலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ரசிக் சோலங்கி(35). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே அஞ்சலி(7), ரியா(5), ஜல்பா(3) ஆகிய மூன்று பெண் இருந்தன. இந்த நிலையில், அவரது மனைவிக்கு நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. 

நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி அடைந்த சோலங்கி  தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளிக் கொன்றுள்ளார். மேலும் அவரும் வீட்டின் முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “தனது மனைவி நான்காவதாகவும் பெண் குழந்தையை பெற்றதால் சோலங்கி விரக்தியில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். அதேபோல், அவருக்கு அதிக அளவில் கடன் சுமை இருந்ததாகவும் கூறினர்” என்றார். முதற்கட்ட விசாரணையின் படி சோலங்கி தன்னுடைய பிள்ளைகளை ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் தள்ளி விட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் சோலங்கியின் மனைவி பிறந்த குழந்தையுடன் பிரசவசம் நடைபெற்ற மருத்துவமனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com