மனைவி இறந்த சோகம்... குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர்

மனைவி இறந்த சோகம்... குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர்
மனைவி இறந்த சோகம்... குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர்

பஞ்சாப் மாநிலம் பதின்டா மாவட்டத்தில் ஒரு நபர் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹமிர்கார் கிராமத்தைச் சேர்ந்த பியண்ட் சிங் என்பவர் மோட்டார் ரிக்‌ஷாவில் பொருட்களை வாடகைக்கு கொண்டு சென்று தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். சிங்கின் மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் இறந்துவிட்டார்.

இதனால் தனி ஆளாக தனது குடும்பத்தை சமாளிக்கமுடியாத சிங், மனமுடைந்து தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கட்டிலை நேராக நிறுத்தி அதில் அர்ஷ்தீ கவுர்(3 வயது), குஷி(1 வயது) என்று இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டிருக்கிறார். பிரப்ஜோத் சிங் என்ற 7 வயது மகனை சீலிங்கில் தூக்கில் மாட்டியிருக்கிறார், பின்பு தானும் பக்கத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது மனைவியின் இல்லாததைத் தாங்கிக்கொள்ள முடியாததால்தான் இந்த முடிவை எடுத்ததாக ஒரு குறிப்பையும் எழுதி வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com