"செத்துப்போன அண்ணன் மீது மட்டும்தான் பாசமா?" தாயை கொலை செய்த இளைய மகன் !

"செத்துப்போன அண்ணன் மீது மட்டும்தான் பாசமா?" தாயை கொலை செய்த இளைய மகன் !
"செத்துப்போன அண்ணன் மீது மட்டும்தான் பாசமா?" தாயை கொலை செய்த இளைய மகன் !

உயிரிழந்த மூத்த மகன் மீது தாய் அதிக அன்பு வைத்திருந்ததால் அவரை கழுத்தறுத்து இளைய மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாநிலத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். அண்மையில்தான் இந்த இளைஞரின் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளார். இந்த பொது முடக்கம் காரணமாக வேலையில்லாமல் வீட்டிலேயே இந்த இளைஞர் இருந்துள்ளார். இதனால் அவ்வப்போது இளைஞருக்கும் அவரது தாயாருக்கும் அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த இளைஞர் தன்னுடைய தாயை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும் அந்தக் கொலையை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸார் கூறும்போது "கொலையாளிக்கு வேலையில்லை. அவரின் தாயார் உயிரிழந்த மூத்த மகன் மீது அதிக அன்பு கொண்டிருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இந்த இளைஞர் தாயை கொலை செய்துள்ளார்" என கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com