\
மனைவியை கொன்று 2 நாட்கள் வீட்டிலே வைத்திருந்த கணவர் : போலி மந்திரவாதியுடன் சேர்ந்து நாடகம்

மனைவியை கொன்று 2 நாட்கள் வீட்டிலே வைத்திருந்த கணவர் : போலி மந்திரவாதியுடன் சேர்ந்து நாடகம்

மனைவியை கொன்று 2 நாட்கள் வீட்டிலே வைத்திருந்த கணவர் : போலி மந்திரவாதியுடன் சேர்ந்து நாடகம்
Published on

சண்டையில் மனைவியை அடித்துக்கொன்ற கணவர் போலி மந்திரவாதியுடன் சேர்ந்து உயிர்பிக்க முயற்சித்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் பெடுல் மாவட்டத்தில் உள்ள சிகோலி கிராமத்தை சேர்ந்தவர் பாய்யலால் இவ்னி (46). இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு 3 பிள்ளைகள். மூன்று பேரும் குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இதையடுத்து பாய்யலால் மற்றும் சுனிதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பாய்யலால் குடிப்பழக்கம் உடையவர் என்பதால் தகராறு அவ்வப்போது கைகலப்பு வரை சென்றிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவு இருவருக்கும் இடையே வழக்கம்போல சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த பாய்யலால் கட்டையால் தனது மனைவியின் தலையில் அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சுனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே தனது மனைவியின் உடலை மாட்டு சானத்தின் உள்ளே மறைத்து வைத்த பாய்யலால், மனைவி மரணம் தொடர்பாக உள்ளூர் போலி மந்திரவாதி ஒருவரிடம் கூறியுள்ளார்.

அந்த போலி மந்திரவாதி மனைவியின் உயிரை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும், அதற்கு பூஜைகள் நடத்த வேண்டும் எனவும் பாய்யலாலிடம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சைக்கேட்டு இரண்டு நாட்களாக மனைவியின் உடலை வீட்டிலேயே அவர் வைத்திருந்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சிதைந்த நிலையில் இருந்த சுனிதாவின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பாய்யலால் கைது செய்யப்பட்டார். பாய்யலால் தனது மனைவியை கொலை செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். அவருடன் இருந்த போலி மந்திரவாதியையும் பிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com