பிளாஸ்மாவுக்கு ஆள் இருக்கு.. - 200க்கும் அதிகமானவர்களை ஏமாற்றி மோசடி செய்த நபர்!

பிளாஸ்மாவுக்கு ஆள் இருக்கு.. - 200க்கும் அதிகமானவர்களை ஏமாற்றி மோசடி செய்த நபர்!
பிளாஸ்மாவுக்கு ஆள் இருக்கு.. - 200க்கும் அதிகமானவர்களை ஏமாற்றி மோசடி செய்த நபர்!

பிளாஸ்மா முறையைப் பயன்படுத்தி 200-க்கும் மேற்பட்டவர்களிடம் இளைஞர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார்

புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு, ஏற்கெனவே குணமானவர்களின் ரத்தத்திலிருந்து ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பு சக்தியை பிரித்தெடுத்து புதிய நோயாளியின் உடலில் செலுத்தும் முறையே பிளாஸ்மா சிகிச்சை. இந்த முறையாலும் பலருக்கு கொரோனா குணமடைந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதைப் பயன்படுத்தி ஹைதரபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 200க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்தீர்ப் ரெட்டி (25) இணையம் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தேடிப் பிடித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர்களிடம் அறிமுகமாகும் சந்தீப், தன்னிடம் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ ஆட்கள் இருப்பதாக பேசி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவார்.

பின்னர் அவர்களிடம் போக்குவரத்துக்கு முன்னதாக பணம் அனுப்புமாறு பணத்தைப் பெற்றுக்கொள்வார். அதற்காக ரசீதும் கொடுப்பார். பிளாஸ்மா பொய்யைப் போலவே கொரோனா தடுப்பூசி இருப்பதாக கூறியும் மோசடி செய்துள்ளார்.

சந்தீப் குறித்து தெரிவித்துள்ள போலீசார், திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சந்தீப் தற்போது தான் விடுதலை ஆனார். பல காவல்நிலையங்களில் அவர் மீது வழக்குகள் உள்ளன. தற்போது பிளாஸ்மா மோசடியில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com